நல்லவன் பாதி கெட்டவன் பாதி கலந்த அஞ்சான் சூர்யா!
ரசிகர்களை நூறு சதவிகிதம் திருப்திபடுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள் நடிகர்கள். அதனால்தான், எந்த கதையையும் அத்தனை எளிதில் ஓ.கே செய்து விடுவதில்லை.
இந்த விசயத்தில் சூர்யா ரொம்ப உஷார். எத்தனை பெரிய டைரக்டர் கதை சொன்னாலும் உடனே க்ரீன் சிக்னல் காட்டி விட மாட்டார். கதையை உள்வாங்கிக்கொண்டு சில நாட்களுக்குப்பிறகுதான் தனது முடிவை சொல்வார்.
அந்த வகையில் சிங்கம்-2வுக்கு பிறகு பல கதைகள் கேட்டு அவர் ஓ.கே பண்ணி நடித்து வரும் படம் தான் ‘அஞ்சான்’. இந்த படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியிருக்கும் சூர்யா, நல்லவன், கெட்டவன் என இரண்டும் கலந்த மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
அதிலும் நல்லவன் கெட்டப்பை விட, கெட்டவன் கெட்டப்புக்கு நிறைய மெனக்கெட்டிருக்கிறார்களாம். சூர்யாவை தாடி வளர்க்க வைத்ததோடு ஹேர் ஸ்டைலையும் புதுவிதமாக மாற்றியிருக்கிறார்கள்.
கதைப்படி மும்பையில் வாழும் தென் இந்தியராக நடிக்கும் சூர்யா, தனது நல்லவன் கெட்டப்பிலிருந்து எதற்காக கெட்டவனுக்கு மாறுகிறார் என்பதுதான் கதையில் புதிய திருப்பமாம். இந்த திருப்பத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பு படு அதிரடியாகவும், அதிர்ச்சி தரக்கூடியதாகவும் தற்போது விறுவிறுப்பாக படமாகிக்கொண்டிருக்கிறதாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment