காஞ்சனா லாரன்சுக்கு வந்த சோதனை!

No comments
முனி படம் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும், அதன் இரண்டாம் பாகமான காஞ்சனா மெகா ஹிட்டானது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட்டடித்தால், அதே வேகத்தோடு முனி 3ம் பாகமான கங்காவையும் அதிரடியாக தொடங்கினார் ராகவா லாரன்ஸ். முக்கியமாக, காஞ்சனா மெகா ஹிட் என்பதால், இந்த கங்காவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் கதை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்திய லாரன்ஸ் படப்பிடிப்பிலும் களமிறங்கினார். முதலில் அஞ்சலியை புக் பண்ணியவர், பின்னர் அவரை கழட்டிவிட்டு விட்டு ஆடுகளம் டாப்சியை புக் பண்ணி படப்பிடிப்பை நகர்த்தி வந்தார். 
 ஆனால், இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது ஒருநாள் திடீரென மயங்கி விழுந்து விட்டாராம் லாரன்ஸ்,. அதையடுத்து மருத்துவரிடம் சென்றபோது, 3 மாதங்களுக்கு கேமரா லைட் வெளிச்சமே உடம்பில் படக்கூடாது என்று கண்டிசனாக சொல்லி விட்டார்களாம். 
அதனால் 3 மாதம் ஓய்வில் இருந்து சிகிச்சை பெற்ற லாரன்ஸ் தற்போது மீண்டும் களமிறங்கி விட்டார். இன்னும் ஒரே மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு கோடை விடுமுறைக்குப்பிறகு படத்தை வெளியிடப்போகிறாராம். மேலும், காஞ்சனாவை மிஞ்சும் அமானுஷ்ய விளையாட்டுக்களையும் இந்த பாகத்தில் அதிகமாக இடம்பெறச்செய்கிறாராம லாரன்ஸ்.

No comments :

Post a Comment