கவர்ச்சிக்கதவுகளை திறப்பாரா நித்யாமேனன்! சறுக்கி விட்ட படங்களால் தடுமாறி நிற்கும் நடிகை!!
தற்போதைய நடிகைகளில் மிக குள்ளமான நடிகை யார் என்றால் அது நித்யாமேனன் தான். அவரை நேரில் பார்த்தால் குட்டிப்பெண்ணாகத்தான் இருபபார்.
அதனால், இவரை எப்படி கதாநாயகியாக திரையில் காட்டுகிறார்கள் என்று பெரும் ஆச்சர்யத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
இருப்பினும் அவரிடமிருக்கும் பர்பாமென்ஸை கருத்தில் கொண்டு சில டைரக்டர்களை அவருக்கு சான்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால், இப்படி உயரம் குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு படங்களில் நடிப்பதற்கும் முன்பும் நித்யாமேனன் எடுத்து போடும் கண்டிசன் பேப்பரோ மிக நீளமானது.
கதையைக்கேட்டதும் முதல் காட்சியில் இருந்து இப்படி இப்படி காட்சிகள் செல்ல வேண்டும்
என்று டைரக்டர்களுக்கு புதிய ஸ்கிரிப்ட் சொல்லும் நித்யா, கவர்ச்சி விசயத்தில் கணுக்காலைகூட காட்ட மாட்டேன் என்பதில் படு கறாராக இருந்து வருகிறார்.
என்கிட்ட எவ்வளவோ திறமை இருக்கிறப்ப, எதுக்காக உடம்பை காட்டி ரசிகருங்களை ஏமாத்தனும்னு நெனக்கிறீங்க என்று கவர்ச்சி ஊறுகாயை கேட்கும் டைரக்டர்களுக்கு சூடு காட்டுவார்.
ஆனால், இப்படி நித்யாவின் அனைத்து கண்டிசன்களுக்கும் உட்பட்ட கதையில் வெளியான சில சமீபகாலமாக படங்கள் எந்த மொழியிலும் போதிய வரவேற்பை பெறவில்லை.
அதோடு, தமிழில் அவர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படம் இன்னும் விலை போகவில்லை.
அதனால், இப்போது புதுப்படங்கள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் நித்யாமேனன்.
இந்த நிலையில், கண்டிசன்களை ஓரளவு தளர்த்திக்கொள்ளலாம் என்று நினைத்து, தான் துரத்தியடித்த டைரக்டர்களுக்கு மீண்டும் அவர் அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார் நித்யா.
ஆனால், ஏற்கனவே நித்யா மறுத்த கண்டிசன்களை முன்வைத்து, இந்த அளவுக்கு கவர்ச்சி சேவைக்கு ஒத்துக்கொண்டால் நடிப்பது பற்றி பரிசீலனை செய்யலாம் என்று தங்கள் சார்பில் புதிய கண்டிசன் எடுத்து போடுகிறார்களாம் டைரக்டர்கள்.
இதனால், அடுத்து காலை முன் வைப்பதா? இல்லை பின் வைப்பதா? என்பது பற்றி தீவிரமாக ஆலோசித்துக்கெணர்டிருக்கிறார் நித்யாமேனன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment