உலகில் சிறந்த இசை அமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு 9வது இடம்
சினிமா தொடர்பான இணையதளமான டேஸ்ட் ஆஃப் சினிமா, உலகின் சிறந்த இசை அமைப்பாளர்கள் (கம்போசர்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த இளையராஜா 9வது இடத்தை பிடித்திருக்கிறார்.
இத்தாலியன் கம்போசர் மெர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசை அமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் இரண்டாவது இடத்தையும், அமெரிக்க கம்போசர் ஜான் வில்லியம்ஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சிறந்த இசை கோர்ப்பு, இசை கருவிகளை ஒருங்கிணைப்பது, பாடகர், பாடலாசிரியர் ஆகிய சிறப்பு தகுதிகளின் அடிப்படையில் இளையராஜா இந்த இடத்தை பிடித்திருப்பதாக அந்த இணையதளம் பாராட்டியுள்ளது.
இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் 4500 பாடல்களுக்கும், 950க்கும் மேற்பட்ட படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் இளையராஜா,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment