மீண்டும் நடிக்கிறேன் –அஞ்சலி

No comments
நடிகை அஞ்சலி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்கிறார். வீட்டை விட்டு வெளியேறி சர்ச்சைகளில் சிக்கிய அவர் முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. ஐதராபாத்தில் நடந்த சினிமா பட விழாக்களில் மட்டும் பங்கேற்று வந்தார். அவரது உடல் எடை கூடியது. ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அமெரிக்கா போய் விட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும், நடிக்க வந்துள்ளார். தெலுங்கு படமொன்றில் நடிக்கிறார். கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையையும் குறைத்துள்ளார். இதுகுறித்து அஞ்சலி கூறியதாவது:– நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டேன். இதுவரை நடிக்காத கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருந்தது. இதற்காக கதைகள் கேட்டு வந்தேன். 
தற்போது நான் விரும்பியபடி ஒரு படம் வந்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படம். எனது கேரக்டர் மிகவும் வலுவானதாக இருக்கும். இதுவரை இது மாதிரி வேடத்தில் நடித்தது இல்லை. கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். அதே நேரம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிப்பேன். இவ்வாறு அஞ்சலி கூறினார்.

No comments :

Post a Comment