திருமணமான நடிகைகளை ஒதுக்க கூடாது: பிரியாமணி
கன்னடம், மலையாள படங்களில் நடிக்கிறார் பிரியாமணி. தமிழ் படங்களில் நடிக்கவும் கதை தேடுகிறார். பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:–
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தி பட உலகில் திருமணமான நடிகைகள் ஒதுக்கப்படுகின்றனர். அவர்கள் நடிக்க விரும்பினால் அம்மா, அண்ணி கேரக்டர்களே கொடுக்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். இந்தியில் திருமணத்துக்கு பிறகும் கரீனாகபூர், வித்யாபாலன் போன்ற நடிகைகள் கதாநாயகிகளாகவே நடிக்கின்றனர். அந்த நிலைமை இங்கு வர வேண்டும்.
தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க ஆர்வம் உள்ளது.
டைரக்டர்கள்தான் என்னை அழைக்க வேண்டும். நான் ஒருவரை காதலிக்கிறேன். அவர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது. என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகே என் திருமணம். இந்தி படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment