தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுடன் சூர்யா சந்திப்பு

No comments
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவை சூர்யா சந்தித்து பேசினார். ஐதராபாத்தில் இந்த சந்திப்பு நடந்தது. சூர்யா தற்போது அஞ்சான் படத்தில் நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வருகிற 2–ந்தேதி முடியும் என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யா ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு நடிகர் மோகன்பாபு வீட்டுக்கு சென்றார். அங்கு மோகன்பாபு தனது 62–வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டு இருந்தார். அவருக்கு சூர்யா பிறந்த நாள் வாழ்த்து கூறினார். சூர்யா திடீரென வந்தது.
 அங்கு இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன்பாபு கட்டிப்பிடித்து வரவேற்றார். மோகன்பாபுவின் மகனும் நடிகருமான மனோஜ் மஞ்சு, மகளும் நடிகையுமான லட்சுமிமஞ்சு மற்றும் குடும்பத்தினர் சூர்யாவின் கைகளை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments :

Post a Comment