ஆந்திராவில் சுருதிஹாசனின் ஆபாச போஸ்டர் கிழிப்பு
சுருதிஹாசன் ஏற்கனவே பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்தியில் வந்த 'டிடே' படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசம் காட்டினார். படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருந்தார்.
இந்த படத்தின் ஸ்டில்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படம் சுருதிஹாசன் எதிர்ப்பை மீறி தமிழில் டப்பிங் செய்யப்பட்டது. தற்போது ‘ரேஸ் குர்ரம்’ என்ற தெலுங்கு படத்திலும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இதில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்துள்ளார். அடுத்த மாதம் (ஏப்ரல்) 5–ந்தேதி இப்படம் ரிலீசாக உள்ளது.
படத்தை விளம்பரபடுத்துவதற்காக சுருதிஹாசனின் ஆபாச போஸ்டர்களை ஐதராபாத் முழுவதும் ஒட்டி உள்ளனர். முக்கிய சந்திப்புகளில் பெரிய பேனர்களாகவும் வைத்துள்ளார்கள். வாகனங்களில் செல்பவர்கள் இந்த போஸ்டர்களையும் பேனர்களையும் நின்று பார்ப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து மனித உரிமை அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுருதிஹாசனின் ஆபாச போஸ்டர்களை கிழித்து எரிந்தார்கள். சுருதிஹாசனுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பினார்கள். போலீசாரும் போஸ்டர்களை கிழித்தார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment