விஜய் பாராட்டால் மகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்

No comments
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன் இசை பயணத்தை இயக்குனர் வசந்த பாலனின் வெயில் படம் மூலம் தொடங்கினார். பின்பு பல படங்களில் இசையமைத்து வெற்றிகளை கண்ட அவர் விக்ரம் சுகுமாரனின் மதயானை கூட்டம் பட மூலமாக தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். இப்போது மணி நாகராஜ் இயக்கும் பென்சில் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிவுள்ளார். இந்த படத்திற்காக கடினமாக உழைத்து தன் எடையை ஒன்பது கிலோ வரை குறைத்து, கதைக்கு ஏற்றவாரு பள்ளி சிறுவன் போல் தயாராகியுள்ளார். இவரின் உழைப்பை பாராட்டி சினிமா துறையில் முன்னனி ஹிரோக்களான ஆர்யா, ஜெயம் ரவி, கார்த்தி போன்றவர்கள் ஜி.விக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். 
 இதற்கிடையில் இளைய தளபதி விஜய்யும், ஜி.வி. பிரகாஷிடம், நான் உங்களின் பென்சில் படத்தின் படங்களை பார்த்தேன், மிகவும் அழகாக மாறிவிட்டீர்கள் என்று பாராட்டினாராம். இளைய தளபதி விஜய்யின் இந்த பாராட்டுக்களால் பெரும் மகிழ்ச்சியடைந்ததாக ஜி.வி. பிரகாஷ் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment