டும் டும் டும் எப்போது? சதா

No comments
திருமணம் குறித்து முதன் முறையாக வாய் திறந்துள்ளார் சதா. தமிழில் ஜெயம், அந்நியன், திருப்பதி, வர்ணஜாலம், பிரியசகி உள்ளிட்ட படங்களில் நடித்தார் சதா. அஜித், விக்ரம் என பிரபல நடிகர்களுடன் நடித்தும் சதாவுக்கு வாய்ப்பு குவியவில்லை. இந்நிலையில் விஷால் நடித்துள்ள மத கஜ ராஜா படத்தில் கெஸ்ட் ரோல் வேடம் ஏற்றார். இப்படம் வெளிவராமல் முடங்கி உள்ளது. தற்போது மலையாளத்தில் ஹசிம் மோரிகர் இயக்கும் படத்தில் சதாவாகவே நடித்து வருகிறார். வாய்ப்புகள் இல்லாத நிலையில், திருமணம் எப்போது செய்துகொள்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளா சதா. நிறைய படங்களில் நடிக்க காத்திருக்கிறேன். இருப்பினும் பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்.
 தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வருகிறேன். இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment