நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி: பிரியாமணி

No comments
பருத்தி வீரன்’ மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை. கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார். மலையாள படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் தமிழ் பட உலகை நிலையாக ஆக்கிரமித்து கொண்டதால் பிரியாமணிக்கு படங்கள் குறைந்து விட்டது. இந்த நிலையில் பிரியாமணி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. 
இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:– என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிப்பேன். எதிர்காலத்தில் படங்கள் டைரக்டு செய்ய ஆர்வம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment