அனிருத்தின் டாஸ்மாக் பாடல் சென்சார் கத்தரியிலிருந்து தப்பிக்குமா?

No comments
இன்றைய சினிமாக்களில் கதை இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் காட்சிகள், டாஸ்மாக் குத்துப்பாட்டுகள் இல்லாத படமே இல்லை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. மேலும், பூரண மதுவிலக்கு வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கொடிபிடித்து வரும் இந்த நிலையில், இதுவரை டாஸ்மாக் விசயத்தில் அக்கறை இல்லாமல் இருந்து வந்த சென்சார்போர்டு, தற்போது மழுங்கின கத்தியை சாணை பிடித்துக்கொணடு கத்தரிக்கத் தொடங்கியுள்ளது. 
 அதன் முதல் கட்டமாக, சமீபத்தில் என் நெஞ்சைத் தொட்டாயே என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு டாஸ்மாக் குத்துப்பாடல் சென்சாரின் கத்தரிக்கு இறையானது. அதையடுத்து அந்த பாடலையே டாஸ்மாக் வாடை இல்லாமல் புதிதாக பாடல் பதிவு செய்து சென்சாரிடம் ஒப்புதல் பெற்றனர். 
 இந்த நிலையில், சிவகார்த்திகேயன்-ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே படத்திலும் அனிருத்தின் இசையில் ஒரு டாஸ்மாக் பாடல் இடம்பெற்றது. அனிருத்துடன் இணைந்து இசையமைப்பாளர் தேவாவும் பாடியுள்ள அந்த பாடல், 'ஓப்பன் த டாஸ்மாக்...' என்றுதான் தொடங்குகிறது. 
குடிமன்னர்களை குஷிபடுத்தும் வகையில் உருவாகியுள்ள அந்த பாடலில் சிவகார்த்திகேயனும், அனிருத்தும் சேர்ந்து குத்தாட்டமாடியிருக்கிறார்களாம். இந்த சேதி கோடம்பாக்கத்தில் பரவியதைத் தொடர்ந்து, சென்சார்போர்டும் உஷாராகியுள்ளதாம். ஆக, மான்கராத்தே சென்சாருக்கு போகும்போது, அப்பாடல் தப்பிக்குமா? கத்தரிக்கு இறையாகுமா? என்பது தெரியவரும். மேலும், ஏற்கனவே பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாச ஆல்பம் வெளியிட்டு சர்சையில் சிக்கிய அனிருத், இப்போது டாஸ்மாக் பாடல் சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.

No comments :

Post a Comment