சீனுராமசாமி படத்தில் நடிக்க அழைப்பு வருமா? - எதிர்பார்ப்பில் சுனைனா

No comments
காதலில் விழுந்தேன் சுனைனா, பிகினி நடிகையாக உருவெடுத்த பிறகும் அவரை கோலிவுட் சினிமா அரவணைக்கவில்லை. அதோடு சீனுராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்தில் எஸ்தர் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருந்தார். ஆனால், அதன்பிறகு தன்னை டோட்டல் கோடம்பாக்கமே வாரி அணைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்த சுனைனாவுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது ஸ்ரீகாந்துடன் நம்பியார் படத்தில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். 
 இந்த நிலையில், நீர்ப்பறவை படத்தை இயக்கிய சீனுராமசாமி அடுத்து விஜயசேதுபதி, விஷ்ணுவை நாயகனாகக்கொண்டு இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடிக்க தனக்கு சான்ஸ் தருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் சுனைனா. இந்த படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடிக்க மனீஷாயாதவ், ஒப்பந்தமாகி விட்ட நிலையில், விஷ்ணுவுக்குத்தான் இன்னும் ஜோடி நடிகை முடிவாகவில்லையாம்.
 ஏற்கனவே மனீஷா ஒப்பந்தமாகியுள்ள வேடத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளை மேக்கப் டெஸ்ட் எடுத்த சீனுராமசாமி, விஷ்ணுவுடன் நடிக்கப்போகும் நடிகைக்காகவும் சில புதுமுகங்களை அழைத்து மேக்கப் டெஸ்ட் எடுக்கிறாராம். 
அதனால், இதுவரை தன்னை அழைக்காத போதும், இறுதியாக எந்த நடிகையும் செட்டாகவில்லை என்றால் தன்னைதான் அழைப்பார் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாராம் சுனைனா. ஏற்கனவே சீனுராமசாமி இயக்கிய நீர்ப்பறவை படத்திலும் விஷ்ணுவுக்கு ஜோடியாக சுனைனாதான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment