நாய்கள் ஜாக்கிரதை ஹாலிவுட்டில் இருந்து சுட்ட கதையல்ல! -சிபிராஜ்

No comments
ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தில் அறிமுகமானவர் சிபிராஜ். அதன்பிறகு சில படங்களில் நடித்தார். ஆனபோதும், மார்க்கெட்டில் அவரால் உச்சம் தொட முடியவில்லை. நடித்த படங்களின் அதிர்ச்சி தோல்வி காரணமாக சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த சிபிராஜ், தற்போது நாய்கள் ஜாக்கிரதை படம் மூலம் மீண்டும் பிரவேசித்துள்ளார். பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்த லீ படத்தை தயாரித்த, அவரது அப்பாவே இப்படத்தையும் தயாரிக்கிறார்.
 ஏற்கனவே சிபிராஜ்-பிரசன்னா இணைந்து நடித்த நாணயம் படத்தை இயக்கிய சக்தியே இப்படத்தையும் இயக்குகிறார். இப்படம் பற்றி சிபிராஜ் கூறுகையில், சில வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால், கடந்த ஒரு வருடமாகவே கதைகள் கேட்டு வந்தேன். ரீ-என்ட்ரியில் நான் நடிக்கிற படம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும். 
கண்டிப்பாக வெற்றி பெறக்கூடிய அம்சம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கதை தேர்வில் ஈடுபட்டிருந்தேன். 
அப்போது என்னை வைத்து நாணயம் படத்தை இயக்கிய சக்தி சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது. முழுக்க முழுக்க ஒரு நாயை மையமாக வைத்த கதை இது. இந்த த்ரில்லர், ஆக்ஷன் கதையில் ஒவ்வொரு விசயத்திலும் நாய்தான் எனக்கு உறுதுணையாக இருக்கும். அதோட உதவி இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. ஆக இந்த படம் இளவட்ட ரசிகர்கள் மட்டுமின்றி குழந்தைகளையும அதிகமாக கவரும் விதத்தில் தயாராகிறது.
 மேலும், நாயை மையமாக வைத்து ஏற்கனவே பல படங்கள் வந்திருக்கிறது. குறிப்பாக ஹாலிவுட்டில் அதிகம். அதற்காக நாங்கள் ஹாலிவுட் படத்தை சுட்டு விட்டோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இது முழுக்க முழுக்க புதிய கற்பனையில் உருவான படம் என்றும் சொல்லும் சிபிராஜ், இந்த படத்திற்கு பிறகு எனது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடித்து விடும் என்று தனது நம்பிக்கையை சொல்கிறார்.

No comments :

Post a Comment