இயக்குனரான எடிட்டர்!

No comments
பாரதிராஜாவால் வேதம் புதிது படத்தில் எடிட்டராக அறிமுகப்படுத்தப்பட்டவர் எம்.ஏ.மோகன்ராஜ். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். அதன் பிறகு சீனு படத்திற்காக மாநில அரசின் விருது பெற்றார். சின்னத்தம்பி, மன்னன், உழைப்பாளி, உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். மோகன்ராஜ் இப்போது ஈரோடு 27 கி.மீ என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். ஸ்ரீராம், ஷைலு, ஷாமினி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். 
"ஈரோட்டிலிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஈரோடு வரையிலான இடைவெளியில் நடக்கும் ஒரு பரபர திரைக்கதை. ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் கலந்த திகில் படம். எனது அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். 
படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட இருக்கிறேன்" என்கிறார் இயக்குனர் எம்.ஏ.மோகன்ராஜ்.

No comments :

Post a Comment