கோச்சடையானோடு ஓய்வு பெறலாமா...? ரஜினி கொடுத்த ஷாக்!!
கோச்சடையான் படத்தோடு சினிமாவுக்கு ஓய்வு பெற்று விடலாமா என்று பாக்யராஜ், அமிதாப் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஷாக் கொடுத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் தொடங்கி தன் மகள் தற்போது இயக்கியுள்ள கோச்சடையான் படம் வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். சுமார் 40 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் ரஜினி, தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கோச்சடையான் படத்தோடு சினிமாவுக்கு ஓய்வு கொடுத்திடலாமா என்று தனது நண்பரிடம் ஆலேசானை கேட்டுள்ளார் ரஜினி. அந்த நண்பர் வேறுயாரும் அல்ல இந்திய அளவில் சிறந்த திரைக்கதை மன்னன் என்று பெயர் எடுத்த இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தான்.
இதுப்பற்றி வாரஇதழ் ஒன்றுக்கு பாக்யராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, சமீபத்தில் எனது பத்திரிகையாளர் நண்பர் தமிழ்வாணன், தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு என் வீட்டுக்கு வந்தார். அவரது குழந்தைக்கு பிறந்தநாள் என்று கூறி ஆசீர்வாதம் பண்ணச்சொன்னார். நானும் ஆசீர்வதித்தேன்.
ரஜினி சாரும் என் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். நானும் ரஜினியிடம் பேசினேன். அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் என்ன இப்படி கேட்டுட்டீங்க உடனே வாங்க என்றார். நான், தமிழ்வாணன் மற்றும் அவரது மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றேன். ரஜினியும் ஆசீர்வாதம் செய்தார். பின்னர் என்னோடு தனிமையில் பேச வேண்டும் என்றார்.
தமிழ்வாணனை அனுப்பி வைத்துவிட்டு ரஜினியிடம் பேசினேன். அவர் சொன்ன விஷயம் எனக்கு ஷாக்கிவிட்டது.
இப்போது நிறைய இளம் தலைமுறையினர் நடிக்க வந்துவிட்டனர். நான் இனி தொடர்ந்து நடிக்கணுமா, பேசாமல் கோச்சடையான் படத்தோட நான் ஓய்வை அறிவித்து விடலாமா, நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்டார்.
எனக்கு ஷாக்காவிட்டது. ஏன் இப்படி பேசுறீங்க, உங்ககூட நடிக்க வந்தவர்கள் எல்லாம் இன்னும் நடித்து கொண்டு இருக்கிறார்கள், சிலர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க சென்று விட்டனர். ஆனால் நீங்கள் இன்னும் சூப்பர் ஸ்டாராகவே இருக்குறீர்கள், இந்த புகழ் வேறு யாருக்கும் கிடைக்காது. உங்க மனசுல இருந்து அந்த எண்ணத்தை நீக்கிவிட்டு பேசாமல் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடுங்கள், மக்களையும், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்துங்கள் என்று சொன்னேன்.
உடனே ரஜினி, இதேமாதிரி அமிதாப் பச்சனிடமும் கேட்டேன், அவரும் இதே பதிலைத்தான் சொன்னார், எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க என்று சிரித்து கொண்டே சொன்னார் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.
இரண்டு படங்களில் நடிக்கிறார்
இதனிடையே கோச்சடையான் படத்தை முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த், முதலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் ரு படம் பண்ண இருக்கிறா
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment