இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் - ஹன்சிகா!!
எல்லோரும் காதலிக்கும்போதுதான் சொல்லமுடியாத சந்தோசத்தில் பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஹன்சிகாவோ காதலை முறித்துக்கொண்ட பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். அதோடு, முன்பு கலவரமான முகத்துடனேயே ஸ்பாட்டில் அமர்ந்திருப்பவர் இப்போது, கலகலப்பாக குஷி மூடில் வளைய வருகிறார். மேலும், தமிழில் நம்பர்-ஒன் குதிரையாக இருந்தவரின் மார்க்கெட் படிப்படியாக இறங்கி வந்த நிலையில், தற்போது விக்ரமின் ராஸ்கல், ஆர்யாவின் மீகாமன் படங்கள் புக்காகியிருப்பதோடு, அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் ஹன்சிகா.
இப்படி சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்ட மறுகனமே, ஹன்சிகாவின் கால்சீட் டைரி நிரம்பத் தொடங்கியிருப்பதற்கு முக்கிய காரணமே அவரது தாய்குலம் மோனா மோத்வானிதானாம். சிம்பு-ஹன்சிகாவின் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த அவர், இப்போது காதல் டிராப்பாகிப்போனதும், சில முக்கிய டைரக்டர் மற்றும் ஹீரோக்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரியப்படுத்தியிருக்கிறார்.
அதோடு, வீழ்ந்து கிடக்கும் ஹன்சிகாவின் மார்க்கெட்டை நீங்கள்தான் சீர்படுத்த வேண்டும் என்றும் கனிவான வேண்டுகோளை வைத்தாராம். அதையடுத்துதான், ஹன்சிகா தாய்குலத்தின் வேண்டுகோளை தாழ்பணிந்து நிறைவேற்றும் பணிகளில் மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களும் சீரியசாக இறங்கியுள்ளார்களாம்.
அதனால்தான், தனது மார்க்கெட் கூடிய சீககிரமே கிடுகிடுவென்று உயர்ந்து தான் விட்ட இடத்தை எட்டிப்படித்து விடுலாம் என்ற நம்பிக்கை ஹன்சிகாவுக்கு இப்போது வந்துள்ளதாம்.
அதையடுத்துதான் அவர் முகத்தில் இத்தனை சந்தோசமாம். அதனால் காதல் முறிவைப்பற்றி யாராவது துக்கம் விசாரிப்பது போன்று விசாரித்தால், முன்பை விட இப்போதுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்லி அவர்களின் வாயடைத்து விடுகிறார் ஹன்சிகா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment