மார்ச் 21ல் வெளியாகும் அஜித் படம்!

No comments
அஜித்தின் வீரம் திரைப்படம் தெலுங்கில் ‘வீரு டொக்கடே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. ‘வீரம்’ ரிலீசான அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகவிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற 21ம் திகதி படம் ரிலீசாவதாக அறிவித்திருக்கிறார்கள். ‘சிறுத்தை’ சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்க, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். 
 அஜித் நடிக்கும் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருப்பதாலும், அஜித்துடன் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான தமன்னா, சிறுத்தை சிவா, தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதாலும் இப்படத்திற்கு அங்கு நல்ல வரவேற்பை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments :

Post a Comment