தேடுதல் வேட்டையில் சூர்யா

No comments
தரமான கதைகளை தேடி வருகிறாராம் சூர்யா. சிங்கம்-2 படத்திற்கு பிறகு எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பது என்பது சூர்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது. இதில் கெளதம்மேனன் படத்தில் முதலில் நடிக்க தயாரானபோது, அவர் சொன்ன கதையில் சூர்யாவுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஏற்கனவே மாற்றான் தோல்வியில் இருந்தவர், மீண்டும் அந்த தோல்வி தன்னை தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக, அடுத்து லிங்குசாமி சொன்ன கதையில் நடிக்க முடிவெடுத்தார். 
 தற்போது லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. இதற்கிடையே அடுத்தடுத்து அவரை சந்தித்து சில பிரபல இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்களாம். ஆனால், அப்படி அவர் கேட்ட கதைகளில் ஒன்றுகூட தேறவில்லையாம். அதனால், எவ்வளவு வித்தியாசமான கதையாக இருந்தாலும் அதற்கேற்ப முழுசாக என்னை மாற்றிக்கொண்டு என் உழைப்பை நூறு சதகிவிதம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.
 ஆனால், நல்ல தரமான கதைகள் கிடைக்கவில்லையே என்று கூறிவரும் சூர்யா, மேலும் பல இயக்குனர்களிடம் கதை கேட்கும் படலத்தை முடுக்கி விட்டுள்ளார்.

No comments :

Post a Comment