ரஜினியின் வில்லனாக சுதிப்

No comments
சூப்பர் ஸ்டாரின் வில்லனாக நடிக்கவுள்ளார் சுதிப். கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். ஏற்கெனவே எந்திரன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரத்தினவேலு இந்த படத்திலும் பணியாற்ற உள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். அனுஷ்கா நாயகியாக பேசப்பட்டு வரும் நிலையில், அவரால் இப்படத்தில் நடிக்க இயலவில்லை என்றால் பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். 
 நான் ஈ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு வந்தவர் கன்னட திரைப்பட நடிகர் சுதீப். தற்போது இந்த படத்திற்கு வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி, ரவிக்குமார் படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments :

Post a Comment