காதலிக்கிறேன் ஆனால் காதலன் யாரென்று சொல்ல மாட்டேன்! -சமந்தா

No comments
தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சித்தார்த்-சமந்தா பற்றிய காதல் செய்திகள் சில வருடங்களாகவே புகைந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி சித்தார்த் எதையும் வெளிப்படையாக சொல்ல மறுத்து வருகிறார். அப்படி தான் சொன்னால் சமந்தாவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ, ரகசியம் காத்து வருகிறார். ஆனால் இந்த விசயத்தில் சமந்தா சில சமயங்களில் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடுகிறார். அப்படி அவரிடம சமீபத்தில் காதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் காதலிப்பது உண்மைதான். ஆனால், நான் காதலிக்கும் நபரை மட்டும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 அதேசமயம், எனக்கு ரொம்ப பிடித்தமானவர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் தெலுங்கு டைரக்டர் திரி விக்ரம். அதற்காக இவர்களில் ஒருவர்தான் உங்கள் காதலரா? என்று கேட்காதீர்கள். அதற்கு எனனிடம் பதில் இல்லை என்று கூறியுள்ள சமந்தா, இன்னும் 4 வருடங்களுக்குப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றியே யோசிப்பாராம். 
அதுவரைக்கும் லவ் ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்குமாம்.

No comments :

Post a Comment