டி.வி ரசிகர்களை சிரிக்க வைப்பது சிரமம்: ஷப்னம்

No comments
தெய்வமகள், மை நேம் இஸ் மங்கம்மா சீரியலில் காமெடியாக நடித்து புகழ்பெற்றவர் ஷப்னம். தற்போது மடிப்பாக்கம் மாதவன், தொடரிலும் காமெடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை ரசிகர்களை சிரிக்க வைப்பது சிரமமான வேலை என்கிறார் ஷப்னம் மேலும் அவர் கூறியதாவது: அழகாக இருந்துகொண்டு காமெடியா நடிக்கிறாயே என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஏன் அழகான பெண்கள் காமெடி பண்ணக்கூடாதா என்று நான் திருப்பி கேட்கிறேன். சின்னத்திரை சீரியல்கள் என்றாலே அழுவாச்சியாகத்தான் இருக்க வேண்டுமா சிரிக்க வைக்க கூடாதா. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்ற அவர்களை சிரிக்க வைப்பது பெரிய பாக்கியம்.
 அதோடு சின்னத்திரை ரசிகர்கள் ரொம்பவே சீரியசானவர்கள். அவர்களை சிரிக்க வைப்பது சிரமம். அதை சவாலாக செய்து வருகிறேன். சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. அதற்காக நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன் நல்ல கேரக்டர்கள் வந்தால், குறிப்பாக காமெடி கேரக்டர் வந்தால் நடிக்கலாம். என்கிறார் ஷப்னம்.

No comments :

Post a Comment