படம் இயக்குவதால் நடிக்கும் படத்துக்கு டிமிக்கி கொடுக்கும் டேனியல் பாலாஜி

No comments
காக்க காக்க படத்தில், சூர்யாவின் போலீஸ் டீமில் அதிகாரிகளில் ஒருவராக நடித்தவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் புகழ்பெற்றார். அவர் தற்போது மறுமுகம், ஞானகிறுக்கன் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டு படங்களிலுமே சைக்கோ கேரக்டர்தான். இதுதவிர ஒரு படத்தை இயக்க இருக்கிறார். தான் இயக்கும் படத்தில் அதிக கவனம் செலுத்துவதால் நடித்த படங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாராம். மறுமுகம் படத்தின் புரமோசன்களுக்கு வராமல் அடம்பிடிக்கிறாராம். 
அந்த படத்தின் எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லையாம். அதேபோல ஞான கிறுக்கன் படத்தின் புரமோசனுக்குவம் வருவதில்லையாம். ஆடியோ பங்ஷனுக்கு தயாரிப்பாளரும், டைரக்டரும் மிரட்டித்தான் அழைத்து வரவேண்டியது இருந்ததாம். "பட வாய்ப்பு கிடைப்பதே அரிதாக இருக்கும் இந்த காலத்தில் கிடைத்த வாய்ப்பைகூட சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவராக இருக்கிறாரே" என்று வருத்தப்படுகிறார்களாம் நண்பர்கள்.

No comments :

Post a Comment