நடிகராகும் இன்னொரு இசையமைப்பாளர் கே!
கதைக்காக படங்கள் ஓடத் தொடங்கிய பிறகு யார் வேண்டுமானாலும் கதாநாயகனாக நடிக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நான் படத்தில் இசையமைப்பாளர், நடிகரான விஜய் ஆண்டனி இப்போது சலீம் படத்தில் நடிப்பவர், அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து கோலிவுட்டின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பென்சில் படத்தில் நடித்து வருகிறார்.
அவர்களையடுத்து இப்போது கே என்ற இன்னொரு இசையமைப்பாளரும் கள்ளப்படம் என்ற படத்தில் நடிக்கிறார். இவர், மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அப்படத்தில் இடம்பெற்ற கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா - என்ற பாடல் ஹிட்டானதால் முதல் படத்திலேயே பேசப்பட்டார் கே.
அதையடுத்து முகமூடி, ஆரோகணம், ஒன்பதுல குரு ஆகிய படங்களுக்கு இசையமைத்த கே, இப்போது, கள்ளப்படம் என்ற படத்திற்கு இசையமைத்து, அதில் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு பாடலுக்கும் இசையமைத்துள்ள கே. அந்த பாடலை கடந்த மகளிர் தினத்தன்று பதிவு செய்தாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment