தெனாலிராமனில் இருவேடத்தில் வடிவேலு
காமெடி நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் ஜகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடிக்கிறார். சரித்திர கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. நாயகியாக மீனாட்சி தீட்சித் நடிக்கிறார்.
ராதாரவி, மனோபாலா, மன்சூர்அலிகான், சந்தான பாரதி, ஜி.எம்.குமார் போன்றோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. டி.இமான் இசையமைத்துள்ளார். இம்மாதம் இறுதியில் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.
வடிவேலு இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இம்சை அரசன் 23–ம் புலிகேசியில் இரு வேடங்களில் வந்தார்.
அப்படம் வெற்றிகரமாக ஓடியது. அதுபோல் இதுவும் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கின்றனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) படம் ரிலீசாகும் என தெரிகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment