தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகிறார் கஜாலா
இயக்குனர் அமீரின் ‘ராம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜாலா. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார். அதன்பிறகு, ஒருசில படங்களில் நடத்த அவர், சமூக அந்தஸ்துக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பிற்காக சில காலங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார்.
இந்நிலையில் தனது கல்வியை முடித்துவிட்ட கையோடு மீண்டும் சினிமாவில் கால்பதிக்க வந்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்பது படைப்பு திறனும் துடிப்பும் கூடியது. இதன் மூலம் பிரபலம் என்ற அந்தஸ்தை எளிதில் பெற்றுவிடலாம்.
100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்த நாட்டில் புகழ்பெற்ற நட்சத்திரமாக இருப்பது மிக எளிதானது அல்ல.
மிகவும் அதிர்ஷ்டக்காரியாக இருப்பதால் தமிழ்நாட்டு நட்சத்திரங்களில் நானும் ஒருத்தியாக இருக்கிறேன்.
புகழ்பெற்ற நடிகைகளான நதியா, ரேவதி, ஷாலினி ஆகியோர் எனது முன்மாதிரிகளாவார். கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் தமிழ் சினிமாவில் எனக்கென்று தனியொரு இடத்தை பிடிப்பேன் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment