நடிகை ரதி மகனுடன் கமல் மகள் அக்ஷரா காதல்

No comments
கமல் மகள் அக்ஷராவுக்கும் பழைய நடிகை ரதியின் மகன் தனுஜ்வில்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மும்பையில் பரபரப்பு செய்தி பரவி உள்ளது. அக்ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அக்கா சுருதிஹாசன் நடிகையானதால் அக்ஷராவையும் சினிமாவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது தனுஷ் ஜோடியாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பால்கி இப்படத்தை இயக்குகிறார். 1970 மற்றும் 80 களில் ரதி தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக கலக்கினார். 
புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, கழுகு உள்பட பல படங்கில் நடித்தார். ரதியின் மகன் தனுஜ் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அக்ஷரா தனுஜ் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். 
இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து சரிகா அதிர்ச்சியாகி உள்ளார். அக்ஷரா இப்போது தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். காதல் விவகாரங்களில் சிக்கி எதிர்காலத்தை பாழ்படுத்த வேண்டாம் என்று அவர் கவலைப்படுகிறாராம். சினிமாவில் முழு கவனமும் செலுத்தும் படியும் காதலில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் மகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்.

No comments :

Post a Comment