மலையாள இயக்குனரின் தமிழ் இன்னிசை சித்திரம்!

No comments
நினைத்தாலே இனிக்கும் மாதிரி பாடல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாகும் இன்னிசை சித்திரங்கள் இப்போது மிகவும் குறைவு. மலையாள இயக்குனர் ஹைதர் அலி அதை போக்குகிறார். தமிழில் அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ஒரு வானவில் போலே ஒரு இன்னிசை சித்திரம். ரியாஸ்ஷா என்பவர் இசை அமைக்கிறார். படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். அதில் இரண்டு சிம்பொனி இசைக் கோர்வையும் அடங்கும், மலையாள நடிகர் கலாபவன் மணியும், புகழ்பெற்ற பியானோ இசை கலைஞரான ஸ்டீபன் தபேசியும் இணைந்து சிம்பொனி இசை கோர்வையை உருவாக்கி இருக்கிறார்கள்.
 அவர்கள் படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்கள். ஒரு இசை கருவி மெக்கானிக்கிற்கும், ஒரு பாடகிக்கும் இசையால் வரும் காதலும், அந்த இசையே காதலுக்கு வில்லனாக மாறுவதுமான கதையாம். அதனால் படம் முழுக்க இசை வழிந்தோடுமாம். மெக்கானிக்காக அனுமோகனும், பாடகியாக அவள் பெயர் தமிழரசி புகழ் மனோசித்ராவும் நடிக்கிறார்கள்.

No comments :

Post a Comment