இன்று மாலை 6.30 மணி முதல் திரையரங்குகளில் நிமிர்ந்து நில்
சமுத்திர கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும் ராகினி திவேதி, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் நேற்று (07.03.2014) வெளியாவதாக இருந்தது. ஆனால், விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குமிடையே ஒருசில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இப்படம் திட்டமிட்டபடி நேற்று வெளியாகவில்லை.
நேற்று வெளியாகும் என்று திரையரங்குக்கு சென்ற ரசிகர்கள் படம் திரையிடப்படாததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இந்நிலையில் படத்தை வெளிக்கொண்டுவர விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சுவார்த்தை இன்று காலை முடிவுக்கு வந்தது.
அதனால், இன்று மாலை 6.30 மணி காட்சி முதல் இப்படம் வெளியாகவுள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment