படம் ரிலீசாகாததால் தற்கொலை முயற்சியா?: சமுத்திரக்கனி விளக்கம்

No comments
ஜெயம் ரவி, அமலா பால் ஜோடியாக நடித்த ‘நிமிர்ந்து நில்’ படம் நேற்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் நின்று போனது. தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட கடன் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சினைகள் காரணமாக படம் வரவில்லை என்று கூறப்பட்டது. இப்படத்தை ரிலீஸ் செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். படம் ரிலீசாகாத வேதனையில் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நேற்று இரவு செய்திகள் பரவின. இவர் ஏற்கனவே நாடோடிகள், போராளி, நிறைஞ்ச மனசு, உன்னை சரணடைந்தேன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். 
 நிமிர்ந்து நில் படத்துக்காக கடுமையாக உழைத்தார். எனவே படம் நின்று போனது அவருக்கு வேதனையை ஏற்படுத்தியதாகவும் எனவே தற்கொலைக்கு முயன்றார் என்றும் கூறப்பட்டது. இது பற்றி சமுத்திரக்கனியை தொடர்பு கொண்டு கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:– நான் நன்றாக இருக்கிறேன்.
 அடுத்த படத்துக்கான வேலைகளுக்காக வெளியூர் வந்தேன். அதற்குள் இப்படி வதந்தி பரவி உள்ளது. படம் வெளிவருதில் சில சிக்கல்கள் இருப்பது நிஜம். அதற்காக தற்கொல முடிவுக்கு வரும் கோழையல்ல நான். தைரியமானவன். படம் தடைகளை கடந்து வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment