வீரபாண்டிய கட்டபொம்மன் கெட்டப்பில் அசத்தினார் சித்தார்த்! -வசந்தபாலன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!!
தமிழக ரசிகர்களிடம் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னாலே அவர்களது மனக்கண்ணில் தோன்றுவது நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் திரு உருவம் தான். மீசையை முறுக்கிக்கொண்டு தில்லாக அவர் பேசிய டயலாக்கும், ஆவேச நடிப்பையும் யாராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. ஆனால், அப்படிப்பட்ட சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் கெட்டப்பில் தற்போது வசந்தபாலன் இயக்கியுள்ள காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்தும் ஒரு சீனில் நடித்துள்ளாராம்.
இதுபற்றி வசந்தபாலன் கூறுகையில், 1940களில் நடந்த நாடகத்துறையினர் பற்றிய கதையில் உருவாகும் இந்த படத்தில் சித்தார்த்-ப்ருதிவிராஜ் இருவருமே பெண் வேடம் உள்பட பலதரப்பட்ட வேடங்களில் நடித்துள்ளனர். அதில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் சித்தார்த் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது. வீரபாண்டிய கட்டபொம்மனாக அவர் கண்முன்னே வந்து நின்றபோது ஒருகணம் அசந்து விட்டேன்.
அந்த அளவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனை கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தினார் சித்தார்த். அவரது உடம்பிலும், முகத்திலும் அந்த ஆவேசம் தெரிந்தது என்று அள்ளி விட்டார்.
அதைக்கேட்டு, கொஞ்சம் ஓவரா இருக்குதே என்பது போல் சித்தார்த் அங்குமிங்கும் திரும்பி பார்த்தபடி அமர்ந்திருக்க, எதிரில் அமர்ந்திருந்த மீடியாவினரோ, ரொம்ப ஓவரா இருக்குதே என்று ஆளாலுக்கு கிசுகிசுத்துக்கொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment