விஜய் படத்தை கைப்பற்ற அதிரடி முயற்சியில் இறங்கிய இலியானா!

No comments
தமிழில் கேடி என்ற படத்தில்தான் அறிமுகமானார் இலியானா. அனால் அதன்பிறகு தமிழில் படம் இல்லாததால் ஆந்திராவில் கொடி நாட்டினார். அனுஷ்கா-தமன்னா போன்ற கவர்ச்சிப்புயல்களுக்கு நடுவே இலியானாவும் சில ஆண்டுகளாக மையம் கொண்டிருந்தார். அதையடுத்து மீண்டும் தமிழுக்கு வர நினைத்தவர் விக்ரமுடன் ஒரு படத்தில் கமிட்டானார். ஆனால் சில நாள் படப்பிடிப்போடு அந்த படமே கிடப்பில் போடப்பட்டது. அப்படி வந்தவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கண்ணில் பட்டதால் த்ரீஇடியட்ஸ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மெகா வாய்ப்பினை பெற்றார். 
ஆக, ரீ-என்ட்ரி அமர்க்களமாக இருக்கும் போலிருக்கே என்று ஆரவாரத்துடன் களமிறங்கினார் இலியானா. ஆனால் மறுபடியும், புதிய படம் கிடைக்காமல் ஒத்த படத்தோடு கோடம்பாக்கத்தைவிட்டே வெளியேறினார்.
 அப்படி சென்றவர் இந்திக்கு சென்று சில படங்களில் நடித்ததோடு மார்க்கெட் கவிழ்ந்து விட்டதால், தமிழ், தெலுங்கு என்று அடுத்த ரவுண்டை அதிரடியாக ஆரம்பிக்க வந்திருக்கிறார். ஆனால் இந்த முறையும் முன்னணி ஹீரோக்களுடன்தான் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள இலியானா, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய், அதற்கடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டு அப்படத்தில் நடிப்பதற்கு தீவிர முயற்சி எடுத்து வருகிறார். 
 இன்னமும் கதாநாயகி முடிவு செய்யப்படாத அப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா ஒரு நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அப்படத்தில் இரண்டு நாயகி என்பதால், அந்த இன்னொரு நாயகி வேடத்தையாவது கைப்பற்றி விட வேண்டும் என்று திரைக்குபபின்னால் அதிரடி முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் இலியானா.

No comments :

Post a Comment