பெண் சாமியாரிடம் குறி கேட்ட டைரக்டர் பிரியதர்சன்-லிசி தம்பதியர்!
சிறைச்சாலை, சினேகிதியே, லேசா லேசா உள்பட பல படங்களை தமிழில் இயக்கியவர் ப்ரியதர்சன். மலையாளப்பட இயக்குனரான இவர், விக்ரம் என்ற படத்தில் கமலுடன் நடித்த லிசியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த அவர்களது குடும்ப வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே புயல் வீசியது. அதனால், ப்ரியதர்சன்-லிசி இருவருமே பிரிந்து வாழ்ந்தனர்.
இந்நிலையில், ப்ரியதர்சனை விட்டு முழுமையாக பிரிய நினைத்த லிசி, அவரிடம் விவாகாரத்து கேட்டதோடு, 80 கோடி ஜீவனாம்சமும் கேட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ப்ரியதர்சன், மீண்டும் அவருடன் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, அவர்களது குடும்பத்தார் கலந்து பேசியபோது எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
ஆனால், இந்த விசயம் கமல்ஹாசனின் கவனத்துக்கு வந்தபோது ப்ரியதர்சன்-லிஸி இருவருமே தனக்கு நண்பர்கள் என்பதால், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சேர்த்து வைத்தார்.
இதையடுத்து தற்போது ஆன்மீக வழியில் இறங்கியுள்ள அவர்கள, கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கேரளா திருச்சூரில் உள்ள நாகராஜா கோயிலுக்கு சென்று பாலாபிசேகம் செய்து வழிபட்டபோது, அந்த கோயிலின் ஆசிரமத்தில் உள்ள பெண் சாமியார் உமாதேவியை ப்ரியதர்சன் தம்பதியினர் சந்தித்துள்ளனர். அப்போது அந்த சாமியார் அவர்களுக்கு அருள்வாக்கு சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment