இயக்குனருக்கு டிமிக்கி கொடுக்கும் நயன்தாரா!

No comments
இரண்டாவது இன்னிங்சில் அஜீத்துடன் என்ட்ரி கொடுத்ததால் நயன்தாராவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களை கைப்பற்றியிருக்கும் அவர், கஹானி ரீமேக்கான தெலுங்கில் அனாமிகா, தமிழில் நீ எங்கே என் அன்பே என இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, இப்படத்தில் ஆக்சன் காட்சிகளிலும் நடித்து முத்திரை பதித்திருக்கிறார். அதையடுத்து, நயன்தாராவின் நடிப்பை பற்றி அப்படங்களை இயக்கியுள்ள சேகர் கம்முலா பக்கம் பக்கமாய் புகழ் மடல் வாசித்துக்கொண்டு திரிந்தார். 
கூடவே வித்யாபாலனை மிஞ்சும் வகையில் நயன்தாரா நடித்திருப்பதாகவும் ஒரு பிட்டைப் போட்டார். அதோடு அவரது நடிப்புக்கு நாங்கள் கொடுத்த கூலி மிகக்குறைவு என்றும் பில்டப் கொடுத்தார். இப்படி நயன்தாராவை அவர் தூக்கி வைத்து பேசுவதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணமும் இருந்தது. 
அதாவது படத்தின் ப்ரமோஷன் காட்சிகளுக்கு நயன்தாராவை அழைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது அதுபற்றி அவரிடம் பேசியபோது, நயன்தாரா லைனில் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம். 
எத்தனை முறை போன் செய்தாலும், டேக்கில் இருக்கிறார், டேக்கில் இருக்கிறார் என்ற ஒரே பதிலையை திரும்பத்திரும்ப சொல்லி சேகர் கம்முலாவை வெறுப்பேத்தி வருகிறாராம். இதனால், நயன்தாராவை புகழ்ந்த பேசிய அவரது வாய், இப்போது கண்டபடி விமர்சித்து வருகிறது.

No comments :

Post a Comment