பஞ்ச் டயலாக் வேண்டாம்! கார்த்தி போட்ட கண்டிசன்!!
சகுனி படத்தில் அரசியல் கதையில் நடித்திருந்தார் கார்த்தி. ஆனால் அப்படம் தோல்வியடைந்ததாடு, அவரது மார்க்கெட்டையும் சரித்துப் போட்டது..அதனால், அதன்பிறகு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் பிரியாணியும் வெற்றியை கொடுக்காததால் இப்போது மீண்டும் ஒரு அரசியல் கதையில் நடிக்கிறார் கார்த்தி.
அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் அப்படத்தில் சுவரில் விளம்பரங்களை எழுதும் ஓவியர் கதாபாத்தித்தில் நடிக்கிறாராம் கார்த்தி.
அப்படி அவர் தேர்தல் நேரத்தில் எழுதும் விளம்பரங்களால் ஒரு பிரச்னை வெடிக்கிறதாம். அதையடுத்து, அடிதடியில் இறங்கும் கார்த்தியை அந்த பிரச்னையே அரசியல்வாதிகளுடன் மோதலை ஏற்படுத்தி விடுகிறதாம்.
ஆக, இந்த படமும் சகுனி போன்று அரசியலை தழுவித்தான் உருவாகிறதாம்.
அதேசமயம் அரசியல் படத்தில் நாட்டு நடப்புகளை சுட்டிக்காட்டி அரசியல் கட்சிகளை, பஞ்ச் டயலாக் கொண்டு சாடினால் வம்பாகி விடுகிறது என்பதால், அதிரடியான வசனங்களுக்கு கார்த்தியே கத்திரி போட்டு பேசியுள்ளாராம்.
தலைவா படத்தில் நடித்த விஜய்க்கே அந்த கதியென்றால் நமக்கெல்லாம் எந்த கதியோ என்று நடிகருக்குள் ஏற்பட்ட பீதிதான் இதற்கு காரணமாம். ஆக, அதிக காரத்துடன் கதை பண்ணிய ரஞ்சித், இப்போது தனது கார மிளகாய் கதையை குடை மிளகாய் போன்று படமாக்கிக்கொண்டிருக்கிறாராம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment