கோச்சடையானுக்கு தியேட்டர் பிரச்சனை வருமா? கோதாவில் இறங்கிய இளவட்ட ஹீரோக்கள்!!

No comments
பொங்கலுக்கே திரைக்கு வர இருந்தது ரஜினியின் கோச்சடையான். ஆனால் அந்த சமயத்தில் கோச்சடையான் பணிகள் நிறைவடையாததால் கோச்சடையானை ஏப்ரல் 11-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். இப்படி முன்கூட்டியே அறிவித்ததால், ஏப்ரலில் விஸ்வரூபம்-2 படத்தை வெளியிடுவதாக இருந்த கமல்கூட மே மாதத்துக்கு மாறி விட்டார். ஆனால், இப்போது விஷாலின் நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயனின் மான்கராத்தே ஆகிய படங்கள் அதே ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறதாம். 
அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, நான் சிகப்பு மனிதன் பட நிறுவனத்திடம், ரஜினி படம் ஏப்ரலில் வருகிறதே? என்று சிலர் கேட்டபோது, அதனால் என்ன, நாங்களும் எங்கள் படத்தை ஏப்ரலில் வெளியிட ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். 
அதன்படி இப்போது ரிலீஸ் செய்கிறோம். எங்களுக்குப்போட்டியாக எத்தனை படங்கள் வந்தாலும் கவலைப்படவில்லை. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள். அதையடுத்து முக்கிய தியேட்டர்களை கைபபற்றும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைப்பார்த்த தியேட்டர் அதிபர்கள், எந்த படமாக இருந்தாலும் முன்பணம் தர மாட்டோம். விருப்பமானால் வாருங்கள் என்று புதிய கண்டிசனை பிறப்பித்துள்ளனர்.
 அதற்கு, தியேட்டர் கிடைத்தால் போதும் என்று இளவட்ட ஹீரோக்களின் பட நிறுவனங்கள் உடன்பட்டு வருகின்றனர். ஆனால், கோச்சடையான் யூனிட்டோ, உடன்படுவதா? வேண்டாமா? என்று யோசனையில் இருந்து வருகிறது. ஆக, சினிமாக்காரர்களின் போட்டியை பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்

No comments :

Post a Comment