குஷ்பூவுக்கு மீண்டும் கோயில் கட்டுகிறார்களாம்!

No comments
தமிழ் சினிமாவில் குஷ்பூ கோலோச்சிய காலகட்டத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். குஷ்பு நடித்த படங்கள் திரைக்கு வரும்போது தியேட்டர்களில் நடிகர்களுக்கு இணையாக அவருக்கும கட்அவுட்கள் வைத்து கொண்டாடினார்கள். அப்படியிருந்த நிலையில், திருச்சியைச்சேர்ந்த ஒரு ரசிகர் குஷ்பூவுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகமே நடத்தினார். இது நாடெங்கும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, கும்மென்று இருந்த இட்லியை குஷ்பூ இட்லி என்றார்கள். 
ரசிகர்களின இந்த வீக்னெஸைப்பார்த்த ஓட்டல்காரர்கள், அதன்பிறகு குஷ்பூ இட்லி இங்கு கிடைக்கும் என்று போர்டு மாட்டியே வியாபாரத்தை பெருக்கினார்கள். ஆனால் பின்னர், சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட பிறகு சின்னத்திரை, அரசியல் என்று தனது ரூட்டை மாற்றிக்கொண்ட குஷ்பூவுக்கு தற்போது அரசியலில் சாதகமான சூழ்நிலை இல்லாததால் சின்னத்திரை பக்கம் மறுபடியும் வந்திருக்கிறார். 
 அப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பாக அதைப்பற்றிய செய்தி குஷ்பூவின் புகைப்படத்துடன் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அப்போது, அதில் குஷ்பூவின் புகைப்படத்தைப்பார்த்த ஒரு ரசிகர், அவரது அழகில் சொக்கிப்போனவர், உங்களுக்கு இன்னொரு கோயில் கட்டத் தயார் என்று கருத்து தெரிவித்திருந்தாராம். 
அதையடுத்து, குஷ்பூவுக்கு கோயில் கட்டுவதற்கு நான் இடம் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று மற்றொரு ரசிகரும் கமெண்ட் அடித்துள்ளாராம். அதற்கு குஷ்பூ, எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல், ஓ அப்படியா ரொம்ப தேங்க்ஸ் என்று தனது பதிலை தெரிவித்திருக்கிறாராம்.

No comments :

Post a Comment