காதலருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றவில்லை! - மறுக்கிறார் காஜல்அகர்வால்
காஜல்அகர்வாலின் சினிமா கேரியர் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சின்னச்சின்ன கிசுகிசுக்கள் வந்தாலும், அது மார்க்கெட்டை உலை வைக்கும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்ததில்லை. ஆனால், அவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம் முடிந்ததில் இருந்து காஜலை தொழிலதிபர்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி புகைந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஆந்திராவில் உள்ள ஒரு தொழிலதிபரை காஜல் ரகசியமாக காதலித்து வருவதாக சொன்னவர்கள், இப்போது மும்பையிலுள்ள ஒரு தொழிலதிபரை அவர் தீவிரமாக காதலித்து வருவதாக செய்தி பரவி கிடக்கிறது.
இந்த சமயம்பார்த்து, துபாய் நாட்டில் காதலருடன் காஜல் அகர்வால் பொது இடங்களில ஜாலியாக லூட்டி அடித்து வருவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையதளங்களில் வெளியான புகைப்படஙகள் காஜல்அகர்வாலை தடுமாற வைத்திருக்கிறது.
அதனால், இதுவரை காதல் கிசுகிசுக்களை கண்டு கொள்ளாமல் இருந்துவந்த காஜல், இப்போது அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், நான் இப்போதும் சினிமாவில் பிசியாகவே இருக்கிறேன். அதனால் எனக்கு காதலிக்க நேரமே இல்லை. மேலும், இணையதளங்களில் நான் காதலருடன் வெளிநாடுகளில் சுற்றித்திரிவதாக வெளியான செய்தி உண்மையில்லை.
எனக்கு எல்லா நாடுகளிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். இங்கு சுதந்திரமாக பொது இடங்களில் நடக்க முடியவில்லை என்பதால், வெளிநாடுகளுக்கு செல்லும்போது நண்பர்கள் துணையுடன் பொது இடங்களில் ஹாயாக நடந்து செல்வேன். அப்படி நான் சென்றதைதான் இப்படி காதலருடன் ஊர் சுற்றியது போன்று செய்தி வெளியாகியிருக்கிறது.
மேலும், நான் இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவிலும் இல்லை. இன்னும் 3 வருடங்களுக்கு பிறகுதான் அதுபற்றி யோசிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் காஜல்அகர்வால்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment