நான் யாரையும் காதலிக்கவில்லை: காஜல் அகர்வால்

No comments
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால். நடிகை காஜல் அகர்வாலையும், தொழில் அதிபர் ஒருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் துபாயில் ஜோடியாக சுற்றுவது போன்ற படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் யாரையும் காதலிக்கவில்லை. என் திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டேன். 
 மேலும் நிறைய படங்களில் தற்போது பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். என் உழைப்பு எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. என் திருமணம் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்தே நடக்கும் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment