வங்கதேச பிரதமரை மகிழ்ச்சிப்படுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்

No comments
இந்த மாதம் 16 ஆம் தேதி – அதாவது நாளை தொடங்கயிருக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் தொடாக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. வங்கதேசத்தில் இந்தப் போட்டிகள் நடக்கின்றன. உலக அளவில் இந்தப் போட்டியை விளம்பரப்படுத்த உலக அளவில் புகழ்பெற்றவர்கள் தேவை. அதற்கு வங்கதேசம் தேர்வு செய்தது, ஏ.ஆர்.ரஹ்மான். இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ரஹ்மான், வங்கதேச பிரதமர் ஹசீனா சந்தித்துக் கொண்டனர். அதுபற்றி கருத்து கூறிய பிரதமர், ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
 அவர் தொடக்கவிழாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதால் இந்தப் போட்டிக்கு உலக அளவில் கவனம் கிடைக்கும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் ரஹ்மானுடன் இசை நிகழ்ச்சி நடத்தயிருக்கும் இன்னொரு பிரபலம் ராப் பாடகர் ஏகான்.

No comments :

Post a Comment