விஜய் படத்தில் புதிய வில்லன்!

No comments
துப்பாக்கி’ படத்திற்கு பிறகு விஜய்-முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி, சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக முதலில் வங்காளத்தை சேர்ந்த நடிகர் டோட்டாய் ராய் சௌத்ரி ஒப்பந்தமாகியிருந்தார். இவருடன் விஜய் சண்டை போட்ட காட்சிகள் ஆரம்பத்தில் படமாக்கப்பட்டன. இந்நிலையில், இப்படத்தின் கதையை டோட்டாய் ராய் ஒரு பேட்டியில் தெரிவித்துவிட்டார்.
 இதனால், டென்ஷனான முருகதாஸ் கதையில் சில திருத்தங்களை செய்து படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அதன்படி, இப்படத்தில் டோட்டாய் ராய்க்கு சாதாரண வில்லன் கதாபாத்திரம்தானாம். இன்னொருவர்தான் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் வருகிறாராம். 
அந்த முக்கிய வில்லன் கதாபாத்திரத்திற்கு பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். தற்போது விஜய்யுடன் இவர் மோதும் சண்டைக் காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.

No comments :

Post a Comment