ரோஜா 2–ம் பாகத்தை மணிரத்னம் இயக்க வேண்டும்: மதுபாலா

No comments
அரவிந்த்சாமி, மது பாலா ஜோடியாக நடித்து 1992–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ரோஜா’. மணி ரத்னம் இயக்கினார். இந்த படத்தில்தான் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதன் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும் பல விருதுகள் இப்படத்துக்கு கிடைத்தன. ‘‘சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை’’, ‘‘காதல் ரோசாவே எங்கே நீ எங்கே’’, ‘‘புது வெள்ளை மழை’’, ‘‘தமிழா தமிழா’’, ‘‘ருக்குமணி ருக்குமணி’’ போன்ற இனிமையான பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று மதுபாலா வற்புறுத்தி உள்ளார். 
அவர் கூறியதாவது:– ‘ரோஜா’ படம் தயாரான போது நான் இளம்பெண்ணாக இருந்தேன். அதிகாலை 4 மணி 5 மணி என்றெல்லாம் படப்பிடிப்பு நடந்தது. எதுவும் புரியாமலேயே அப்படத்தில் நடித்தேன். 
அந்த படம் வெளியான பிறகு எல்லோரும் என்னை ரோஜா என்றே அழைத்தனர். பொதுவாக படங்களில் நடிக்கும் நடிகைகளின் கேரக்டர்கள் ஞாபகம் இருப்பது இல்லை. ஆனால் ரோஜா படத்தில் எனது கேரக்டர் மக்கள் மனதில் பதிந்து விட்டது.
 இதற்காக மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியில் டான், கிரிஷ் படங்களின் இரண்டாம் பாகம் வந்துள்ளது. அதுபோல் ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தையும் மணிரத்னம் இயக்க வேண்டும். வாயை மூடி பேசவும் என்ற தமிழ் படத்தில் நான் மீண்டும் நடிக்கிறேன்.

No comments :

Post a Comment