ஷகிலா வேடத்தில் நடிப்பதாக வதந்தி: அஞ்சலி

No comments
கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதற்கான திரைக்கதையை ஷகிலாவே எழுதி உள்ளார். சினிமா அனுபவங்கள், கதாநாயகியாக ஆசைப்பட்டு கவர்ச்சி நடிகை ஆக்கப்பட்டது, திரைக்குப் பின்னால் தனக்கு நேர்ந்த தொல்லைகள், மலையாள பட உலகினர் பின்னிய சதி வலைகள் அனைத்தையும் ஷகிலா இந்த படம் மூலம் காட்சிப்படுத்த உள்ளார். இந்தியில் டர்டி பிக்சர் பெயரில் படமான சில்க் சுமிதா வாழ்க்கை கதை வெற்றிகரமாக ஓடியதால் இதுவும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் ஷகிலாவாக அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அஞ்சலி தற்போது மீண்டும் மாயமாகி விட்டதாகவும், அமெரிக்காவில் குடியேறி விட்டார் என்றும் செய்திகள் வந்தன.
 இந்த நிலையில் அவர் திடீரென ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:– நான் ஷகிலா வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. அந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை அதற்கு பதில் வேறொரு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த கதை எனக்கு ரொம்ப பிடித்தது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை. இதுபோன்ற கதையைதான் நான் தேடிக்கொண்டு இருந்தேன். டைரக்டர் சொன்னதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். என் சினிமா வாழ்க்கையில் இது திருப்புமுனை படமாக இருக்கும். எல்லோருக்கும் படம் பிடிக்கும். இவ்வாறு அஞ்சலி கூறினார்.

No comments :

Post a Comment