17 வயது பெண்ணுக்கு அம்மாவாக மீண்டும் நடிக்கிறேன்: நவ்யா நாயர்
தமிழ், தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த நவ்யாநாயர். 2010–ல் சந்தீஷ்மேனன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். நிறைய படவாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.
தற்போது அவருக்கு 3 வயதில் மகன் இருக்கிறான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். மோகன்லால்– மீனா ஜோடியாக நடித்து மலையாளத்தில் ஹிட்டான ‘திரிஷ்யம்’ படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் நவ்யாநாயர் நடிக்கிறார்.
மீனா கேரக்டரில் அவர் வருகிறார். 17 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கிறார்.
இதுகுறித்து நவ்யாநாயர் கூறும்போது,
‘‘கன்னடத்தில் தயாராகும் ‘திரிஷ்யம்’ ரீமேக் படத்தை பி.வாசு இயக்குகிறார். மோகன்லால் வேடத்தில் ரவிச்சந்திரன் நடிக்கிறார். இதில் மீனா கேரக்டரில் நடிக்கும்படி என்னை அழைத்தபோது மறுக்க முடியவில்லை.
மீனா கேரக்டரில் நடிக்கிறேன். 17 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடிக்கீறீர்களே என்று கேட்கின்றனர். கதையும் என் கேரக்டரும் வலுவாக இருந்ததால் நடிக்க சம்மதித்தேன்’’ என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment