ஏ ஆர் ரஹ்மானைப் பார்த்து நடு நடுங்கிப் போயிட்டேன் – இயக்குநர் வசந்த பாலன்

No comments
சென்னை: காவியத் தலைவன் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மானைப் பார்த்தபோது நடு நடுங்கிப் போய்விட்டதாகத் தெரிவித்தார் படத்தின் இயக்குநர் வசந்த பாலன். இயக்குநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன். சித்தார்த் சித்தார்த், பிருத்விராஜ், நாசர், வேதிகா, தம்பி, ராமைய்யா, சிங்கம்புலி மன்சூர் அலிகான் பொன்வண்னன் என மிகப்பெரிய நட்ச்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார். 
 நாடகப் பின்னணி படம் முழுக்க நாடகம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் ஒப்பனையும் இப்படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞரான பட்டணம் ரசீத் அவர்கள் இப்படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்துள்ளார். 
வேதிகா சித்தார்த்தும், பிருத்விராஜூம் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. பரதேசியில் தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த வேதிகாவிற்கு இந்தப்படம் பெரும் அடையாளம். 
பர்ஸ்ட் லுக் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வசந்த பாலன் இந்தப் படத்துக்காக ஏ ஆர் ரஹ்மானுடன் தான் பணியாற்றிய கதையை கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேல் சொன்னார் வசந்த பாலன். “நான் ஒரு உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே ஏ ஆர் ரஹ்மானைப் பார்த்து, அவர் வளர்ச்சியை பிரமிப்புடன் ரசித்தவன். 
இன்று இந்திய இசையின் உலக அடையாளமாகத் திகழ்கிறார் ஏ ஆர் ரஹ்மான். அவர் வீட்டில் பல முறை அவரது தாயார் கையால் பிரியாணி சாப்பிட்டிருக்கிறேன். நடு நடுங்கிப் போய்விட்டேன் ஆனாலும் என் படத்தின் கதையை அவரிடம் சொல்ல சித்தார்த் ஏற்பாடு செய்தார். அவரைச் சந்தித்து கதை சொல்ல உட்கார்ந்த போது நடு நடுங்கிப் போய்விட்டேன். ஆனால் ரஹ்மான் என் மனநிலைப் புரிந்து என்னுடன் இணக்கமாகப் பேசி என் தயக்கம் குறைத்து கதை கேட்டார். அந்தப் பாங்கை யாரிடமும் பார்க்க முடியாது,” என்றார்.

No comments :

Post a Comment