உத்தம வில்லன் படத்தின் அறிமுக போஸ்டர் வெளியீடு

No comments
‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிறகு கமலஹாசன், அவருடைய நண்பரான நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை கமலஹாசன் எழுதியிருக்கிறார். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கமலஹாசனின் ஆஸ்தான வசனகர்த்தா கிரேஸி மோகன் வசனங்களை எழுதுகிறார். ஜீப்ரான் இசையமைக்கிறார். காமெடி கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் காமெடி கேரக்டரில் விவேக் நடிக்கிறார். 
ஷியாம் தத் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இதுவரை உத்தம வில்லன் படத்தின் தகவல்கள் மட்டுமே வந்துள்ள நிலையில், இப்படத்தின் அறிமுக போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

No comments :

Post a Comment