தூக்க மாத்திரை விழுங்கி நடிகை விந்தியா தற்கொலை முயற்சி!

No comments
முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட மோதலால், கன்னட நடிகை விந்தியா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். இதில், அவர், "கோமா நிலையை அடைந்துள்ளார். "மனத மரயல்லி என்ற, கன்னட திரைப்படத்தில் நடித்தவர், நடிகை விந்தியா. கர்நாடகாவின், ஷிமோகா நகரைச் சேர்ந்த இவர், பெற்றோருடன், பெங்களூருவில் வசித்து வந்தார். இவர், மஞ்சுநாத் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. விந்தியா, சினிமாவில் நடிக்க வந்த பின், இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டது. 
மஞ்சுநாத்தை மறந்து, ரவி என்பவருடன், நடிகை விந்தியா, நட்புடன் பழகி வந்துள்ளார். இதை அறிந்த மஞ்சுநாத், விந்தியாவை மிரட்டியுள்ளார். "நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல், உனக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பேன் என, மிரட்டியுள்ளார். 
இதனால், விந்தியா, நேற்று காலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதையறிந்த உறவினர்கள், மருத்துவ மனையில் சேர்த்தனர். 
நேற்று நள்ளிரவு வரை, அவருக்கு நினைவு திரும்பவில்லை. அவர், கோமா நிலையில் உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விந்தியாவின் தாய், நாதம்மா கூறுகையில், "மஞ்சுநாத், என் மகளின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டான். அவளை, சிம்லாவுக்கு அழைத்துச் சென்று மானபங்கம் செய்து விட்டான். இதனால், என் மகள், பித்து பிடித்தவள் போன்று இருந்தாள், என்றார்.

No comments :

Post a Comment