த்ரிஷாவை வீழ்த்தி விக்ரமுக்கு ஜோடியானார் ஹன்சிகா!

No comments
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வந்தார் விக்ரம். அப்படத்தில் உடல் எடையை அதிகப்படுத்தி, குறைத்து என மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்ததால் அந்த படத்தை முடிக்கிற வரைக்கும் அவரால் வேறு படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கதை கேட்பதைகூட தள்ளிவைத்து விட்டு ஐ படத்துக்காக முழு நேரத்தையும் செலவிட்டு வந்தார் விக்ரம். ஆனால், தற்போது விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதால், டப்பிங் பணிகளில் இறங்கி விட்டனர். 
அதனால், தனது பாடிலாங்குவேஜை மாற்றி வரும் விக்ரம், அடுத்து தன்னை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய தரணியின் இயக்கத்தில் ராஸ்கல் என்ற படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார். 
அவர்கள் கூட்டணியில் முன்பு வெளியான படங்களைப்போன்று இதுவும் ஒரு அதிரடி ஆக்சன் படம்தானாம். இந்த சேதியறிந்த த்ரிஷா, ஏற்கனவே விக்ரமுக்கு ஜோடியாக சாமி, பீமா ஆகிய படங்களிலும், தரணி இயக்கத்தில் கில்லி, குருவி ஆகிய படங்களிலும் நடித்திருப்பதால், இந்த முறையும் தனக்கே சான்ஸ் தர வேண்டும் என்று உரிமையோடு சான்ஸ் கேட்டாராம். அவரைப்போலவே, தற்போது சிம்புவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்ட ஹன்சிகாவும் இந்த படத்தில் நடிப்பதற்கு தீவிரமாக முயற்சி எடுத்தாராம்.
 இதையடுத்து, த்ரிஷாவா? ஹன்சிகாவா? என்று விக்ரமுடன் கலந்து பேசிய தரணி, இப்போது த்ரிஷாவை விட ஹன்சிகாவுக்கே மார்க்கெட் இருப்பதால் இருவரும் ஒருமனதாக ஹன்சிகாவையே ஒப்பந்தம் செய்யலாம் என்று பேசி முடிவெடுத்து விட்டார்களாம். இதனால் தனது ஆஸ்தான ஹீரோவும், அபிமான டைரக்டருமே தன்னை கழட்டி விட்டு விட்டார்களே என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் த்ரிஷா.

No comments :

Post a Comment