தீவிர பட வேட்டையில் இறங்கினார் நீதுசந்திரா!
தமிழில் விக்ரம்.கே குமார் இயக்கத்தில் மாதவன் நடித்த யாவரும் நலம் படத்தில் அறிமுகமானவர் நீதுசந்திரா. அதையடுத்து தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன் என சில படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் அவருக்கு பெயர் வாங்கிக்கொடுக்கவில்லை. கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்தும் அவரை கண்டுகொள்வாரில்லை.
அதையடுத்து, பாலிவுட்டுக்கு சென்று சில படங்களில் நடித்து வந்த நீது சந்திராவை, இப்போது அவரை தமிழுக்கு கொண்டு வந்த விக்ரம்.
கே.குமார் தெலுங்கில் நாகார்ஜூனா குடும்பத்தை வைத்து இயக்கி வரும் மனம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். இதே படத்தில் சமந்தா, ஸ்ரேயா போன்ற நடிகைகள் இருந்தும் நீதுசந்திராவுக்கும் வெயிட்டான வேடமாம்.
அதனால், உற்சாகமாக அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், இதையடுத்து, தெலுங்கு மட்டுமின்றி, தனக்கு தொடர்ந்து டேக்கா கொடுத்துக்கொண்டிருக்கும் கோடம்பாக்கத்திலும் கொடி நாட்டி விட வேண்டுமென்று சில இளவட்ட டைரக்டர்களிடம் பட வேட்டை நடத்தி வருகிறார் நீதுசந்திரா.
அப்படி தான் சான்ஸ் கேட்கும்போது, பர்பாமென்ஸ் மட்டுமின்றி, கவர்ச்சி விசயத்திலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல், தாராளம் காட்டி நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் தனது சலுகை அறிவிப்பை முன்மொழிந்து வருகிறார் நீது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment