பட்ஜெட் எகிறி விடும் என்று வெளிநாடு செல்ல தடைபோட்ட விஷால்!

No comments
சமீபகாலமாக படத்தின் கதையில் கவனம் செலுத்துவதைவிட பிரமாண்டங்களை புகுத்துவதில் இயக்குனர்களின் கவனம் அதிகமாகவே உள்ளது. அதனால்தான், ஓரிரு பாடல் காட்சிகளுக்காவது வெளிநாடு செல்லவில்லை என்றால் அதை ஒரு பெரும்குறையாக நினைக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில், தான் தயாரித்து நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தின் படபிடிப்பை முடிந்தவரை இந்தியாவிற்குள்ளேயே எடுத்திருக்கிறார் விஷால். 
 இருப்பினும், முழுக்கமுழுக்க சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டுமே படமாக்காமல், முதல்கட்டத்தின்போது இரண்டு பாடல்களை ராஜஸ்தான், குலுமணாலிக்கு சென்று படமாக்கினார். ஆனால், இப்போது எஞ்சியுள்ள பாடல்களுக்கு வெளிநாடு சென்றால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் திரு கேட்டுக்கொண்டபோது, அதெல்லாம் வேண்டாம். 
அப்படி சென்றால் பட்ஜெட், போட்டதை விட தாறுமாறாக எகிறி விடும் என்று அதற்கு தடைபோட்டு விட்டாராம் விஷால். அதனால், நான் சிகப்பு மனிதனில் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ள இனியாவுடன் விஷால் நடிக்கயிருக்கும் பாடல் காட்சியை சென்னையிலேயே ஒரு நல்ல லொகேஷனை தேடிப்பிடித்து படமாக்க திட்டமிட்டுள்ளார் திரு. 
ஆக, இன்னும் ஒரு இப்படத்தில் பாடல், ஒரு சண்டை காட்சி மட்டுமே பேலன்ஸ் இருக்கிறதாம். அதனால், இம்மாதம் 13-ந்தேதி ஆடியோ ரிலீஸ் பண்ணி விட்டு மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து விட்டார் விஷால்.

No comments :

Post a Comment